நம்பிக்கை ஊட்டும் தேர்வுகள்!

By பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

இளம் தலைமுறையினர் மீது நமது நம்பிக்கை வலுவாகும் வகையில், ‘நீட்’ தேர்வு மற்றும் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு குறித்து, இரண்டு நாட்களில் இரண்டு நல்ல செய்திகள் வந்துள்ளன.

பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளிவந்துள்ளன. 94% தேர்ச்சி பெற்றுள்ளனர்; பெண்களில் 96%க்கு மேல் வெற்றி. கல்வியில் தமிழ்நாட்டு மாணவிகள் தொடர்ந்து சாதனை புரிந்து வருகிறார்கள். பாராட்டுகள்.

இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, கணிதப் பாடத்தை விடவும் அறிவியல் பாடங்களில் அதிகம் பேர் நூற்றுக்கு நூறுபெற்று இருக்கிறார்கள். பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி, தேர்வுகளுக்கு எதிரான எதிர்மறைப் பிரசாரங்கள் என அத்தனை சவால்களையும் தாண்டி சாதனை புரிந்து இருக்கும் இளைஞர்கள் பாராட்டுக்கு உரியவர்கள். இனி இவர்கள் உயர் கல்வியிலும் இதேசாதனைப் பயணத்தைத் தொடர வாழ்த்துகள். கடந்த சில ஆண்டுகளாக ‘நீட்’ தேர்வுக்கு எதிராகவும் ஆதரவாகவும் வலுவான வாதங்கள் முன் வைக்கப்பட்டு வருகின் றன. இரு பக்கங்களிலும் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது. இது குறித்த மாநில அரசின்நிலைப்பாடு, அது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பொது வெளியில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.

ஆனாலும் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான மனநிலையில் இளைய சமுதாயத்தினர் இல்லை என்பதைத் அந்த தேர்வுக்கு கிடைத்துஇருக்கும் வரவேற்பு உணர்த்து கிறது. நாடு முழுதும் சுமார் 20 லட்சம் பேர் குறிப்பாக, தமிழ்நாட்டில் மட்டும் 1.5 லட்சம் பேர் ‘நீட்’ தேர்வை எழுதி உள்ளனர்.

தேர்வுக்குப் பிறகு, சென்னை மாநகரம் முதல் கடைக்கோடி உள் மாவட்டங்கள் வரை, அநேகமாக எல்லாம் இடங்களிலும், ‘நீட்’ தேர்வு குறித்து நேர்மறை எண்ணங்களே நிறைந்துள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் சுப்பிரமணியபுரம் அரசுப் பள்ளி மாணவி ஒருவர் தெரிவித்த கருத்து பிரமிக்க வைத்தது.

இவரது வகுப்பில் படித்த அத்தனை பேரும் நீட் தேர்வு எழுதி உள்ளனர். அருகில் உள்ள வல்லத்திரக்கோட்டை தனியார் கல்லூரிதான் இவர்களது தேர்வு மையம். ஒரு மாணவி, அடையாள புகைப்படம் தவற விட்டு இருந்தார். அலுவலர்கள் உடனடியாக ஒரு வாகனத்தில் அவரை அனுப்பி புகைப்படம் எடுத்து வரச் செய்துதேர்வு மையத்துக்குள் அனுமதித்து இருக்கிறார்கள். அத்தனைதேர்வர்களுக்கும் குடி தண்ணீர்,முகக் கவசம் வழங்கப்பட்டன. பணியில் இருந்த ஆசிரியர்கள் /அலுவலர்கள், தேர்வர்களுக்குத் தொடர்ந்து அறிவுரைகள் வழங்கி னர்.

தேர்வு எழுதும் போது கூட இடையிடையே,நம்பிக்கையுடன் தேர்வு எழுதும்படி அன்போடு கேட்டுக் கொண்டே இருந்தார்கள். தேர்வுக்கு முன்புவரை இருந்த பதட்டம் தேர்வு எழுதத் தொடங்கிய பின்பு மறைந்து போனது. மொத்தத்தில் இனிமையான அனுபவமாக இருந்தது’ என்கிறார். ஒரு சிற்றூரைச் சேர்ந்த இவரின் சமூகக் குடும்பப் பின்னணி மிக சாதாரணமானது. இவருடன் தேர்வு எழுதிய மற்றவர்களும் இதே போன்றவர்கள்தான். ‘இந்தத்தேர்வு தேவையா..?’ என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் –‘ஆமாம். தேர்வு இருக்கட்டுமே… அதெல்லாம் நாங்க ‘பாஸ்’ பண் ணிடுவோம்" என்று கூறியுள்ளார்.

‘நீட்’ தேர்வுக்கு தயார்

சென்னை மாநகரை ஒட்டியுள்ள புகழ் பெற்ற உறைவிடப் பள்ளியைச் சேர்ந்த ஒருவர் கூறியகருத்தும் சிந்திக்க வைத்தது. ‘தேர்வின் எல்லாப் பகுதிகளிலும் கேள்விகள் நேரடியாக விடையளிப்பது போலவே இருந்தது. ஒருவேளை எனக்குப் போதிய மதிப்பெண்கள் கிடைக்கவில்லை எனில் அது என்னுடைய தயாரிப்பில் உள்ள குறையாகத்தான் இருக்க முடியும்’ என்று கூறியுள்ளார். ‘நீட்’ தேர்வுக்கு மாணவ சமுதாயம் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளுதலும் தேர்வு எழுதுதலும் வரவேற்கத்தக்க நல்ல அம்சம். அதேசமயம், வேறு எந்தத் தேர்வு மீதும் இல்லாத அச்சம், அதீத எதிர்பார்ப்பு - நீட் தேர்வு மீது மட்டும் ஏன் திணிக்கப்பட வேண்டும். இதுவே தவிர்க்கப்படக் கூடிய தற்கொலைகளுக்குக் காரணமாகி விடுகிறது. அத்துடன் இத்தகைய துரதிருஷ்ட நிகழ்வுகளுக்குத் தரப் படுகிற முக்கியத்துவம் மிகவும் கண்டிக்கத்தக்கது.

இது தொடர்பாக, மார்ச் 22, 2023 அன்று ‘இந்து தமிழ்’ வெளியிட்ட தலையங்கம், பிரச்சினையின் தீவிரத்தை மிக நேர்மையாக அணுகி, இவ்வாறு மிகத் தெளிவாகக் குறிப்பிட்டது. ‘நீட்தேர்வை மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கான சூழலை ஏற்படுத்துவதும் அது குறித்த அச்சங்களைப் போக்கித் தற்கொலைக்கு எதிரான மனநிலையை உருவாக்குவதும் அரசு, ஆசிரியர், பெற்றோர் மற்றும் ஊடகங்களின் கடமை என்று தெரிவித்தது. எந்தப் போட்டியிலும் தளராது கலந்து கொண்டு தவறாது வெற்றி பெறும் ஆற்றல் தமிழ் இளைஞர்களுக்கு இயல்பாகவே அமைந்த நற்குணம். பிறகு ஏன் கலங்க வேண்டும்…?

இவ்வாண்டு நீட் தேர்வுக்குத் தமிழ்நாட்டில் கிடைத்துள்ள வரவேற்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் படைத்துள்ள சாதனை வெற்றி மூலம் இளைய சமுதாயம் கூறும் செய்தி இதுதான் – ‘இன்றும், நாளையும்... ஏன்... என்றென்றும் எங்களுக்கானது’.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

6 hours ago

கல்வி

4 hours ago

கல்வி

7 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

மேலும்