சென்னை: தமிழகத்தில் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கியது. முதல்நாளில் 18,332 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
விருப்பமுள்ளவர்கள் http://www.tngasa.in/ எனும் இணையதளம் வழியாக மே 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் மே 23-ம்தேதிக்குள் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். அதன்பின், சேர்க்கை கலந்தாய்வு மே 25 முதல் ஜூன் 20-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில், வரும் நாட்களில் விண்ணப்பப் பதிவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
கல்வி
23 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago