சென்னை: பிளாஸ்டிக் தொழில்நுட்பம் தொடர் பான டிப்ளமோ படிப்புகளில் 10-ம்வகுப்பு முடித்த மாணவர்கள் நேரடியாக சேரலாம் என மத்திய அரசின் சிப்பெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள மத்திய பெட்ரோகெமிக்கல்ஸ் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (சிப்பெட்) தலைவர் சூ.இளங்கோவன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சிப்பெட் நிறுவனம், பிளாஸ்டிக் அச்சு தொழில்நுட்ப பட்டயப் படிப்பு மற்றும் பிளாஸ்டிக் தொழில்நுட்ப பட்டயப் படிப்புகளை வழங்குகிறது. இரண்டு ஆண்டு காலம்கொண்ட இந்தப் படிப்புகளுக்கான நேரடி சேர்க்கை நடைபெற உள்ளது. இதில், 10-ம்வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நுழைவுத்தேர்வு ஏதுமின்றி சேரலாம்.
அதேபோல, பி.எஸ்சி. பட்டதாரிகள் பிளாஸ்டிக் செயல்முறை மற்றும் சோதனை பயிற்சி தொடர்பான 2 ஆண்டுகால முதுநிலை டிப்ளமோ படிப்பில் சேரலாம்.
12-ம் வகுப்பு முடித்து உயர்கல்வியைத் தொடர முடியாத மாணவர்கள், 3 ஆண்டுகால பட்டயப் படிப்பில் நேரடி சேர்க்கை மூலம் இரண்டாம் ஆண்டில் சேரலாம்.
» அனைத்து மருத்துவ இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
» நலிந்த தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் குடும்ப நல நிதி - பழனிசாமி அறிவிப்பு
மேற்கண்ட படிப்புகளுக்கான நேரடி சேர்க்கைக்கான கடைசி தேதி ஜூலை 31-ம் தேதியாகும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு ரிலையன்ஸ், டிவிஎஸ்தொழிற்சாலைகள், சாம்சங், ஹூண்டாய், சுப்ரீம், பஜாஜ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பணிபுரிய ஏற்பாடு செய்யப்படும். சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 9360098600, 9600254350 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago
கல்வி
8 days ago
கல்வி
8 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago