அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேர்க்கை; 60 ஆயிரம் மாணவர்கள் முன்பதிவு: நடப்பாண்டில் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு இதுவரை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை பெற்றுள்ள தாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்படுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த ஏப். 17-ம் தேதி தொடங்கி வைத்தார்.

சேர்க்கை பணி விறுவிறுப்பு: இதையடுத்து சேர்க்கைப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அரசுப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு சேர்க்கைக்கு இதுவரை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் விண்ணப்பங்களை பெற்றுள்ளனர்

இதுகுறித்து தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

பெற்றோர் ஆர்வம்ள்: அரசுப் பள்ளியில் சேருவதால் கிடைக்கும் பலன்கள், நலத்திட்டங்களை முன்வைத்து ஆசிரியர்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்பலனாக அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கபெற்றோர் ஆர்வம் காட்டுகின் றனர்.

1-ம் வகுப்பு சேர்க்கைக்கு மட்டும் இதுவரை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை பெற்றுள்ளனர். இதனால் நடப்பு ஆண்டு மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

21 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

மேலும்