சென்னை: ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இது, ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு, ஜேஇஇ பிரதான தேர்வு என 2 கட்டங்களாக நடத்தப்படும்.
அதன்படி, 2023-24 கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதல்நிலைத் தேர்வு கடந்த ஜனவரியில் நடத்தப்பட்டு பிப்ரவரியில் முடிவுகள் வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து ஜேஇஇ 2-ம் கட்ட முதல்நிலைத் தேர்வு, ஏப்.6 முதல் 15-ம் தேதி வரை கணினி வழியில் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகளை jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் என்டிஏ வெளியிட்டது.
தமிழகத்தை சேர்ந்த என்.கே.விஷ்வாஜித் உட்பட 43 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். விதிகளை மீறியதற்காக 15 தேர்வர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஜேஇஇ முதல் நிலைத் தேர்வுகளின் கட் ஆப் மதிப்பெண், மாணவர்கள் தரவரிசைப் பட்டியல் உட்பட இதர விவரங்களை https://nta.ac.in/ எனும் இணையதளத்தில் அறியலாம்.
இவ்விரு தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற அதிகபட்ச மதிப்பெண், சேர்க்கைக்கான கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதனிடையே, முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2.5 லட்சம் மாணவர்கள் ஐஐடிகளில் சேர்க்கை பெறுவதற்கு அடுத்தகட்டமாக பிரதானத் தேர்வில் பங்கேற்க வேண்டும். அந்த வகையில் நடப்பாண்டுக்கான ஜேஇஇ பிரதானத் தேர்வு ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்வில் பங்கேற்பதற்கான விண்ணப்பப் பதிவு இன்று (ஏப். 30) தொடங்குகிறது. எனவே, தகுதி பெற்றவர்கள் /jeeadv.ac.in/ என்ற இணையதளம் வழியாக மே 7-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று இந்த தேர்வை நடத்தும் கவுகாத்தி ஐஐடி அறிவித்துள்ளது.
» அரசு மேல்நிலை பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டுதல் குழு: மே 5 முதல் செயல்பாட்டுக்கு வருகிறது
» தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு 70,000 பேர் விண்ணப்பம்!
முக்கிய செய்திகள்
கல்வி
22 hours ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
11 days ago
கல்வி
11 days ago