பொறியியல், கலை, அறிவியல் படிப்புகளுக்கு மே 2-வது வாரத்தில் விண்ணப்பப் பதிவு

By செய்திப்பிரிவு

சென்னை: பொறியியல், கலை, அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு மே 2-வது வாரத்தில் தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லுாரிகளில் இளநிலை படிப்புகளுக்கு சுமார் 1.5 லட்சம் இடங்கள்உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான சேர்க்கை கலந்தாய்வு 2018-ம் ஆண்டு முதல் இணையவழியாக நடத்தப்படுகிறது. இந்த கலந்தாய்வை தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகம் நடத்திவருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான கலந்தாய்வு ஜூன் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ள மே 8-ம் தேதி முதல் தொடங்கும் என தகவல்கள் வந்துள்ளன. இதுகுறித்து உயர்கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘நடப்பாண்டு பொறியியல் கலந்தாய்வை நடத்துவதற்கான முன்தயாரிப்புகள் அனைத்தும் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. அரசு அனுமதி அளித்ததும் இணையதள விண்ணப்பப் பதிவுக்கான அறிவிப்பு வெளியிடப்படும்’’என்றனர். ​

இதேபோல், உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் 163 அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள்உள்ளன. இவற்றில் சேருவதற்கான இணையதள விண்ணப்பப் பதிவும்மே 9-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதேநேரம் தனியார்கலை, அறிவியல் கல்லூரிகள் ஏற்கெனவே மாணவர் சேர்க்கை நடைமுறைகளை தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

15 hours ago

கல்வி

22 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

மேலும்