சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி முடிவடைந்தது. இத்தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.
விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் 79 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. இப்பணியில் ஏறத்தாழ 60 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
விடைத்தாள் திருத்தும் பணி மற்றும் மதிப்பெண்களை பதிவேற்றும் செய்யும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்துள்ளது.
இந்நிலையில், நீட் தேர்வு முடிவு வெளியான பிறகு பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிடலாமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
» முதல்வருடன் கூட்டணி கட்சியினர் சந்திப்பு - 12 மணி நேர வேலை மசோதா நிறுத்திவைப்பு
» கொடைக்கானலில் மே மாதம் தொடங்கும் கோடை விழாவில் 60-வது மலர் கண்காட்சி
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 7-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு நாடு முழுவதும் 20 லட்சத்து 87 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் இருந்து ஒன்றரை லட்சம் பேர் நீட் தேர்வெழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
கல்வி
13 hours ago
கல்வி
14 hours ago
கல்வி
18 hours ago
கல்வி
19 hours ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
10 days ago
கல்வி
10 days ago