வெயில் கடுமையாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா? - அன்பில் மகேஸ் பதில்

By செய்திப்பிரிவு

சென்னை: வெயில் கடுமையாக இருப்பதால் பள்ளிகள் தாமதமாக திறப்பது குறித்து தற்போதே முடிவு ஏதும் செய்ய இயலாது என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளில் பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் ஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் வகையில் ஜேஇஇ நுழைவுத் தேர்வை எதிர்கொள்வதற்கான பயிற்சி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘நான் முதல்வன்' திட்டத்தின் ஓர் அங்கமான இத்திட்டத்தின் தொடக்க விழா சென்னை சைதாப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இத்திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தான் இந்த பயிற்சி திட்டத்தை தொடங்கி யுள்ளோம். வரும் காலங்களில் அதிகப்படியான மாணவர்கள் ஜேஇஇ பயிற்சியில் சேருவார்கள் என எதிர்பார்க்கிறோம். தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பதற்கு காலதாமதம் ஏற்படுமா என்று கேட்கிறீர்கள்.

கோடை விடுமுறைமுடிந்து பள்ளி திறக்கும்போது வெயில் தாக்கத்தை வைத்து முடிவு செய்யலாம். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பதற்கான அனைத்து சட்டப் போராட்டங்களும் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

கல்வி

10 days ago

கல்வி

10 days ago

கல்வி

11 days ago

கல்வி

11 days ago

கல்வி

12 days ago

கல்வி

12 days ago

மேலும்