1,000 ஏழை மாணவர்களுக்கு இலவச பயிற்சி: ஆலன் 35-வது நிறுவன நாள் விழாவில் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: ஆலன் கரீர் இன்ஸ்டிடியூட் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆலன் கரீர் இன்ஸ்டிடியூட் நிறுவனம் இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளில் இயங்குகிறது. இந்தியாவில் 53 நகரங்களில் வகுப்பறைகளுடன் கூடிய 200 மையங்கள் செயல்படுகின்றன.

கோவிந்த் மகேஷ்வரி, ராஜேஷ்மகேஷ்வரி, நவீன் மகேஷ்வரி, பிரஜேஷ் மகேஷ்வரி ஆகிய 4சகோதரர்கள் இணைந்து இந்நிறுவனத்தை வழிநடத்துகின்றனர். தற்போது இவர்களின் வாரிசுகளான அவிரல், அமன், ஆனந்த், கேஷவ், ஆராத்யா ஆகியோரும் முக்கியப் பொறுப்புகளை வகிக்கின்றனர்.

நிறுவன நாள் விழாவில் இயக்குநர் கோவிந்த் மகேஷ்வரி கூறும்போது, ``மாணவர்களுக்கு சிறந்தகல்வியை வழங்கி வருகிறோம். இந்த ஆண்டில் ஆஷா ஸ்காலர்ஷப் திட்டத்தின் கீழ் ஏழை மாணவர்கள் 1000 பேருக்கு இலவச பயிற்சியை வழங்க உள்ளோம்'' என்றார்.

ஆலன் நிறுவனம் ஏற்கெனவே பல்வேறு மாநில அரசுகளுடன் இணைந்து இலவச கல்வியை வழங்குகிறது. கரோனா பாதித்தகுடும்பங்களைச் சேர்ந்த 300 பேருக்கும் தியாகிகளின் குழந்தைகளுக்கு 90 சதவீதம் வரை கல்வி உதவித் தொகையும் ராணுவம், துணை ராணுவப் படை வீரர்களின் குழந்தைகளுக்கு கட்டணச் சலுகையும்வழங்கப்படுகிறது. இது தவிர,ஆலனில் பல்வேறு உதவித்தொகை திட்டங்களின் கீழ் திறமைகளும் ஊக்குவிக்கப்படுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

3 hours ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

10 days ago

கல்வி

11 days ago

மேலும்