விஐடி பி.டெக். படிப்பு நுழைவு தேர்வு தொடக்கம்: ஏப்.26-ல் முடிவு வெளியாகி அன்றே ஆன்லைன் கலந்தாய்வு

By செய்திப்பிரிவு

வேலூர்: விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக். பொறியியல் படிப்புக்கான கணினி வழி நுழைவுத் தேர்வு தொடங்கியுள்ள நிலையில் வரும் 26-ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டு அன்றைய தினமே ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கவுள்ளது.

விஐடியில் பி.டெக். பொறியியல் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு ‘விஐடிஇஇஇ-2023’ நேற்று தொடங்கி வரும் 22-ம் தேதி வரை கணினி வழியாக நடைபெறுகிறது. உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகள் என மொத்தம் 125 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. விஐடி வேலூர் வளாகத்தில் நடைபெற்ற நுழைவுத் தேர்வை வேந்தர் கோ.விசுவநாதன், பெங்களூரு மையத்தில் நடைபெற்ற தேர்வை விஐடி துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன் பார்வையிட்டனர்.

இதன் முடிவுகள் ஏப்.26-ம் தேதி www.vit.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு அன்றைய தினமே ஆன்லைன் கலந்தாய்வு தொடங்குகிறது.

முதற் கட்ட கலந்தாய்வு (26-4-2023 முதல் 30-4-2023) தரவரிசை 1 முதல் 20,000 வரையும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு (9-5-2023 முதல் 11-5-2023) தரவரிசை 20,001 முதல் 45,000 வரையும், மூன்றாம் கட்ட கலந்தாய்வு (20-5-2023 முதல் 22-5-2023) தரவரிசை 45,001 முதல் 70,000 வரையும், நான்காம் கட்ட கலந்தாய்வு (31-5-2023 முதல் 2-6-2023) தரவரிசை 70,001 முதல் 1 லட்சம் வரையும் நடைபெறும். ஐந்தாம் கட்ட கலந்தாய்வு (12-6-2023 முதல் 14-6-2023) தரவரிசை 1 லட்சத்துக்கு மேல் நடைபெறும். தரவரிசை 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு விஐடி ஆந்திரபிரதேசம் மற்றும் விஐடி போபால் வளாகத்தில் மட்டுமே படிக்க இடம் கிடைக்கும்.

கல்வி கட்டண சலுகை: ஜி.வி. பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மத்திய, மாநில கல்வி வாரியம் நடத்தும் பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவ, மாணவியருக்கு விஐடி பல்கலையில் பி.டெக். படிப்பு காலம் முழுவதும் 100 சதவீதம் கல்வி கட்டண சலுகை வழங்கப்படுகிறது. மேலும், விஐடி நுழைவுத்தேர்வில் தரவரிசையில் முதல் 50 இடங்களில் தகுதி பெறுபவர்களுக்கு 75 சதவீதம், தரவரிசை 51 முதல் 100-க்குள் தகுதி பெறும் மாணவர்களுக்கு 50 சதவீதம், தரவரிசை 101 முதல் 1,000-க்குள் தகுதி பெறும் மாணவர்களுக்கு 25 சதவீதம் கல்வி கட்டண சலுகை 4 ஆண்டு காலம் முழுவதும் வழங்கப்படும்.

அதேபோல், தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம் மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களில் உள்ள கிராமப்புற ஏழை மாணவர்கள் விஐடியில் உயர்கல்வி படிக்கும் வகையில் ‘ஸ்டார்ஸ்’ திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்ட அளவில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு கட்டணத்தில் முழு சலுகை, உணவு, விடுதி வசதியுடன் இலவச சேர்க்கை வழங்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

மேலும்