சென்னை: வரும் கல்வி ஆண்டுக்கு அரசுப் பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை தொடங்குகிறது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் மாணவர்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கக்கோரும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை பள்ளிக்கல்வித் துறை முன்னெடுக்க உள்ளது.
இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இன்றுமுதல் (ஏப்.17) தொடங்குகிறது. மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தின் தொடக்க விழா சென்னை கொளத்தூர் ஜி.கே.எம்.காலனி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 8.45 மணிக்கு நடைபெறுகிறது.
வரும் கல்வியாண்டின் (2023-24) முதல் மாணவர் சேர்க்கை இப்பள்ளியில் பள்ளிக்கல்வி அமைச்சர் முன்னிலையில் நடைபெறுகிறது. அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை குறித்த வாகன விழிப்புணர்வு பிரச்சாரத்தை அமைச்சர்கொடியசைத்துத் தொடங்கிவைக்கிறார். இந்நிகழ்ச்சியில் இந்து சமயஅறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
» அரசு தன்னாட்சி கல்லூரிகளுக்கான தேசிய தரவரிசையில் சென்னை மாநிலக் கல்லூரி 3-வது இடம்
» பள்ளிக்கல்வித் துறையுடன் ஆதிதிராவிடர் நல பள்ளிகளை இணைக்கும் பணி தீவிரம்
பொதுவாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையானது ஜூன் மாதத்தில்தான் நடைபெறும். இந்த ஆண்டு முதல்முறையாகத் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளிலும் ஏப்ரல் மாதத்திலேயே மாணவர் சேர்க்கை தொடங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
8 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago
கல்வி
10 days ago
கல்வி
10 days ago
கல்வி
11 days ago
கல்வி
11 days ago
கல்வி
12 days ago
கல்வி
12 days ago