சென்னை: தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் அங்கீகார நீட்டிப்புக்கான அனுமதி கோரி விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (ஏப்.16) நிறைவு பெறுகிறது.
நம்நாட்டில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமத்தின்கீழ் (ஏஐசிடிஇ) 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகள் தங்களுக்கான அங்கீகாரத்தை ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அதன்படி, பொறியியல் கல்லூரிகளுக்கு 2023-24 கல்வி ஆண்டுக்கான அங்கீகாரம் வழங்கும் நடைமுறைகள் நடைபெற்று வருகின்றன.
அந்தவகையில் புதிய கல்லூரிகள், படிப்புகள் தொடக்கம் மற்றும் அங்கீகாரம் நீட்டிப்பு ஆகியவை தொடர்பாக கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் விண்ணப்பித்து வருகின்றன.
இதற்கான காலஅவகாசம் இன்றுடன் (ஏப்.16) நிறைவு பெறுகிறது. இதையடுத்து தகுதியான கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் பெறுதல் மற்றும் நீட்டிப்புக்கான அனுமதி கோரி தேவையான ஆவணங்களுடன் துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.
» அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - அடுத்த வாரத்தில் தொடங்க திட்டம்
» பள்ளிக்கல்வித் துறையுடன் ஆதிதிராவிடர் நல பள்ளிகளை இணைக்கும் பணி தீவிரம்
தவறியவர்கள் அபாரதத் தொகையுடன் ஏப்.23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை /www.aicte-india.org/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
கல்வி
1 hour ago
கல்வி
6 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago