எங்களது திறன் மேம்பாட்டு பயிற்சியால் 1000+ கல்லூரி மாணவர்கள் பயன்: சென்னை டுவின்டெக் அகாடமி

By செய்திப்பிரிவு

சென்னை: திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்காக, சென்னையின் டுவின்டெக் அகாடமி கடந்த 6 மாதங்களில் 1000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளது.

இது குறித்து அப்பயிற்சி மையம் வெளியிட்ட தகவல்: திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்காக, சென்னையின் டுவின்டெக் அகாடமி கடந்த 6 மாதங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளது. இந்தப் பயிற்சிகள், மாணவர்கள் தங்கள் தொழில்முறை மற்றும் தொழில் முனைவோர் வாழ்க்கையை வடிவமைக்க உதவும். போட்டி நிறைந்த உலக சூழ்நிலையில், மாணவர்களிடமிருந்து குறிப்பிட்ட திறன்களை தொழில் துறை கோருகிறது. பொதுவாக, தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சியின் காரணமாக, கல்வி நிறுவனங்களில் குறிப்பிட்ட பாடத்திட்ட இலக்குகளுக்காக மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் சில திறன்கள் விரைவில் தேவையற்றதாகிவிடுகிறது.

இதனால் மாணவர்கள் தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தங்களது சுய விருப்பம் மற்றும் திறன்களை மேம்படுத்திக் கொள்வதன் மூலம், சிறந்த திறனைப் பெற முடியும். கல்வியுடன், மாணவர்கள் நடைமுறையில் உள்ள பல்வேறு திறன் தொகுப்புகளைக் கற்பதன் மூலம், கல்வியாளர்களுக்கும் தொழில்துறையின் சமூகத் தேவைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க முடியும். வாழ்க்கையில் தெளிவான திட்டமிடல் இலக்கு, சீரான முயற்சி மற்றும் பயிற்சி இருந்தால், சாதாரண மாணவர்களும் சரித்திரம் படைக்க முடியும். பட்டங்களும் தகுதிச் சான்றுகளும் இன்றியமையாததாக இருந்தாலும், அத்துடன் மென் திறன்களும் இணைந்தால்தான் சக்திவாய்ந்த பணியாளர்களாக உருவாக முடியும்.

இந்தப் பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு, தகவல் தொடர்பு, நேர்காணலில் தாக்கத்தை உருவாக்குவதற்கான திறன்கள், ரெஸ்யூம், ஆளுமை மேம்பாடு, இலக்கு அமைத்தல் மற்றும் இலக்கை அடைதல், குழுப்பணி போன்ற முக்கியமான அம்சங்களை மையமாகக் கொண்ட பயிற்சி. தலைமைத்துவம், வணிக நெறிமுறைகள், தொழில்முனைவு, சமூகத்திற்குத் திரும்பக் கொடுப்பது போன்றவை குறித்து பயிற்றுவிக்கப்பட்டது. தேர்வுகள் மற்றும் வகுப்பறை செயல்பாடுகள் மூலம் செயல்திறன் மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்கள், நேர்காணல் சுற்றுகளை திறம்பட கடக்க இந்த பயிற்சி மிகவும் அவசியம் என்று பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்கள் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்.

டுவின்டெக் அகாடமி மாணவர்களை தொழில்துறைக்கு தயாரான தொழில் வல்லுநர்களாகவும் திறமையான தொழில்முனைவோராகவும் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. அகாடமியில் மேலும் பல்வேறு வகையான மதிப்பு கூட்டப்பட்ட படிப்புகளை வழங்கி வருகிறது. சமீபத்திய தொழில்நுட்ப வளர்ச்சிகளை கையாள இது மாணவர்களுக்கு உதவுகிறது. மேலும் அவர்களின் சுயவிவரத்தை வடிவமைக்கும் திறனை மேம்படுத்திக் கொள்ளவும் அவர்களை தயார்படுத்துகிறது.

டுவின்டெக் அகாடமியின் அனுபவம் வாய்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சியாளர்கள் பேராசிரியர்களான ஆர்.ராமகிருஷ்ணன் மற்றும் டாக்டர் அ.மகாலிங்கம் ஆகியோர் பயிற்சி அமர்வுகளைக் கையாண்டனர். டுவின்டெக் அகாடமியின் பாடத்திட்டத்தின் தனித்துவம் கோட்பாடு சார்ந்த அமர்வுகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு அமர்வும் தொடர்ச்சியாக மதிப்பிடப்பட்டு மாணவர்களுக்கான பங்கேற்புச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன என்று அந்தப் பயிற்சி மையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE