சென்னை: தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளை இம்மாதம் 28-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 13-ல் தொடங்கி ஏப்.3-ம் தேதியுடன் முடிவடைந்தது. அதேபோல, மார்ச் 14-ல் தொடங்கிய பிளஸ் 1 பொதுத் தேர்வும் ஏப்ரல் 5-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நேற்று (ஏப்.6) தொடங்கி இம்மாதம் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளை இம்மாதம் 28-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது. இதன்படி, எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத் தேர்வை 1 முதல் 3-ம் வகுப்புகளுக்கு 17-ம் தேதி முதல் 21ம் தேதி வரையும், 4 மற்றும் 5 வகுப்பு மாணவர்களுக்கு உள்ளூர் நிலவரங்களுக்கு ஏற்ப தேர்வுகளை ஏப்ரல் 10-ம் தேதி முதல் ஏப்ரல் 28-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு, உள்ளூர் நிலவரங்களுக்கு ஏற்ப தேர்வுகளை ஏப்ரல் 10-ம் தேதி முதல் ஏப்ரல் 28-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago
கல்வி
11 days ago
கல்வி
13 days ago
கல்வி
13 days ago
கல்வி
14 days ago