பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவடைந்தது - மே 5-ல் முடிவுகள் வெளியிட நடவடிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கியது. இத்தேர்வில் 8 லட்சத்து 52 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளில் வேதியியல், புவியியல், கணக்குப் பதிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன.

இதைத்தொடர்ந்து விடைத்தாள் மதிப்பீட்டு பணி ஏப். 10-ம் தேதி தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் சுமார் 46 ஆயிரம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபடுகின்றனர். தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதி வெளியிடப் படும் என ஏற்கெனவே அறி விக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மார்ச் 14-ம்தேதி தொடங்கிய பிளஸ் 1 பொதுத்தேர்வு நாளையுடன் (புதன்கிழமை) முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு ஏப்.6-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

8 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

கல்வி

10 days ago

கல்வி

10 days ago

கல்வி

11 days ago

கல்வி

11 days ago

கல்வி

12 days ago

கல்வி

12 days ago

மேலும்