புதுடெல்லி: நாடு முழுவதிலும் உள்ள மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட (ஓபிசி), பட்டியலின மற்றும் பழங்குடி (எஸ்சி-எஸ்டி) மாணவர்களின் இடைநிற்றல் குறித்து திமுக எம்பி திருச்சி சிவா கேள்வி எழுப்பினார். இதற்கு மாநிலங்களவையில் மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் பதிலளித்தார்.
திருச்சி சிவா கேள்வி: மாநிலங்களவையின் மூத்த எம்.பியுமான திருச்சி சிவா தனது கேள்வியில், ''மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் மட்டும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களின் இடைநிற்றல் அதிகமாக இருப்பது ஏன்? 2018 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்கள், இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) மற்றும் இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்) ஆகியவற்றில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களின் இடைநிற்றல் அதிகமாக இருப்பது ஏன்?'' என்று கேட்டிருந்தார்.
மத்திய அமைச்சர் பதில்: இதற்கு மாநிலங்களவியில் பதிலளித்த மத்திய கல்வித் துறை இணையமைச்சர் சுபாஷ் சர்கார் அளித்த பதிலில் தெரிவித்ததாவது: ''மத்திய பல்கலைக் கழகங்களில் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் பாடத்திட்ட மாற்றம், விருப்பத் துறைகள் மாற்றம் போன்ற காரணங்களுக்காக தனிப்பட்ட முறையில் இடைநின்று வெளியேறுகிறார்கள். இந்த மூன்று வகை கல்வி நிலையங்களிலும் மொத்த எண்ணிக்கையில் 2018 முதல் 2023 ஆண்டுகளில் 9,578 ஓபிசியினர், 5,101 பட்டியலினத்தர்களும், 4,577 பழங்குடியின மாணவர்களும் இடைநின்று வெளியேறி உள்ளனர்.
இவர்களில், மத்தியப் பல்கலைகழகங்களில் இடைநின்றவர்களாக ஓபிசியில் 6,901, எஸ்சியில் 3,596 மற்றும் எஸ்டியில் 3,949 உள்ளனர். ஐஐடி கல்வி நிறுவனங்களில் ஓபிசி 2,544, எஸ்சி 1,362 மற்றும் எஸ்டி 538 இடம் பெற்றுள்ளனர். ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் ஓபிசி 133, எஸ்சி 143மற்றும் எஸ்டி 90 என்ற எண்ணிக்கையில் இடைநிற்றல் செய்துள்ளனர். இதைத் தடுக்கும் விதமாக கல்விக் கட்டணக் குறைப்பு, கல்வி உதவித்தொகை, தேசிய அளவிலான கல்வி உதவித்தொகைக்கு முன்னுரிமை அளித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது'' என்று அமைச்சர் கூறினார்.
முக்கிய செய்திகள்
கல்வி
12 hours ago
கல்வி
16 hours ago
கல்வி
21 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago