சென்னை: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு மார்ச் 27முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை நிர்வகிக்கும் கேந்திரிய வித்யாலயா சங்கதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
ஆன்லைனில் விண்ணப்பம்: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றாம் வகுப்புக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, மார்ச் 27-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி, ஏப்.17-ம் தேதி இரவு 7 மணிக்கு நிறைவடையும்.
மாணவர் சேர்க்கைக்கான முழு விவரங்களையும் www.kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். சேர்க்கை கோரும் குழந்தையின் குறைந்தபட்ச வயது 2023 மார்ச் 31-ம்தேதியில் 6 ஆக இருக்க வேண்டும்.
மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகள் www.kvsangathan.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஒன்றாம் வகுப்பை தொடர்ந்து, காலியிடங்கள் இருந்தால் 2-ம் வகுப்பு மற்றும்அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கைவிண்ணப்பப் பதிவு சம்பந்தப்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஏப்.3-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி 12-ம் தேதி மாலை 4 மணிக்கு முடிவடையும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளியில் காலியிடங்கள் (2 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகள்) இருந்தால் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
கல்வி
12 hours ago
கல்வி
13 hours ago
கல்வி
15 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago