முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பட்டியல் தயாரிக்க வேண்டும் - முதன்மை கல்வி அதிகாரிக்கு உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீதம் போட்டித்தேர்வு வாயிலாகவும் நிரப்பப்படுகின்றன. பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளி துணை ஆய்வாளர் ஆகியோருக்கு பணிமூப்பு அடிப்படையில் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.

உரிய வழிகாட்டு நெறிமுறை: அந்த வகையில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானோரின் பெயர்பட்டியலை தயாரித்து அனுப்புமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக்கல்வி) உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "அரசுமற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 1.1.2023 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு தகுதிவாய்ந்தோர் பெயர்பட்டியல் தயார் செய்ய பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளி துணை ஆய்வாளர் ஆகியோரின் விவரங்களை உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மாவட்டவாரியாகத் தயார் செய்து பெயர் பட்டியல் மற்றும் கருத்துருக்களை அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE