சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (மார்ச் 12) முடிவடைகிறது.
ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இது, ஜேஇஇ முதல் நிலைத் தேர்வு, பிரதான தேர்வு என 2 பிரிவாக நடைபெறும். இதில் முதல் நிலைத் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி 2023 - 24 கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல் கட்ட முதல் நிலைத் தேர்வு கடந்த ஜன.24 முதல் 31-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வை 8.24 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதன் முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டன. தொடர்ந்து ஜேஇஇ 2-ம் கட்ட முதல் நிலைத் தேர்வு ஏப். 6 முதல் 12-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்.15-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் (மார்ச் 12) முடிவடைகிறது. விருப்பம் உள்ளவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட இதரதகவல்கள் பின்னர் வெளியிடப்படும். கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்விருதேர்வுகளில் எதில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுகிறார்களோ அது சேர்க்கைக்கு கணக்கில் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
8 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago
கல்வி
10 days ago
கல்வி
10 days ago
கல்வி
11 days ago
கல்வி
11 days ago
கல்வி
12 days ago
கல்வி
12 days ago