மதுரை: மதுரை காமராசர் பல்கலைக் கழகம், தேசியக் கல்வி தொடர்புக் கான கூட்டமைப்பு, கல்விப் பல் ஊடக ஆய்வு மையம் (இஎம்ஆர்சி) இணைந்து 14-வது பிரக்கிரிதி 3 நாள் சர்வதேச ஆவண திரைப்பட திருவிழாவை நடத்துகின்றன.
பிஹார் ஆளுநர் இன்று (மார்ச் 1) இவ்விழாவைத் தொடங்கி வைக்கிறார். இதையொட்டி, பல்கலை.யில் தேசிய கல்வித் தொடர்புக்கான கூட்டமைப்பின் இயக்குநர் ஜகத் பூஷன் நட்டா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பல்கலைக்கழக மானியக் குழுவின் கீழ் இயங்கும் சிஇசி உயர்கல்வி தேவைகளை நிவர்த்தி செய்யும் அமைப்பு.
ஆன்லைன் மூலம் உயர்கல்வி தொடர்பான பல்வேறு படிப்புகளை டிஜிட்டல் கல்வி முறையில் வழங்குகிறது. குறிப்பாக, செவித்திறன் குறை பாடு உள்ளவர்களுக்கு கற்றல் சிரமங்களை நிவர்த்தி செய்கிறது. வீடியோ விரிவுரைகள் சைகை மொழி உள்ளடக்க வசதியுடன் 'மாசிவ் ஓபன் ஆன்லைன்' படிப்புகளை வழங்குகிறது.
இந்த அமைப்பு 1997 முதல் திரைப்பட தயாரிப்பாளர்கள், திரைப்பட ஆர்வலர்களை ஊக்குவிப் பதற்காக சர்வதேச ஆவணத் திரைப்பட விழாவை நடத்துகிறது. 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியபோது, ஆன்லைனில் கல்வி கற்க 350 பேர் வரை பதிவு செய்தனர். தற்போது, 27 லட்சம் பேர் இளநிலை பட்டப் படிப்புக்கென பதிவு செய்துள்ளனர்.
» தமிழகத்தில் இன்றுமுதல் பிளஸ்-1, பிளஸ்-2 செய்முறை தேர்வு - 17 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்பு
» 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
இத்திட்டத்தின் மூலம் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கணிதம், பொருளியல், அரசியல் அறிவியல், உளவியல் உள்ளிட்ட 8 பட்டப் படிப்புக்களை ஆன்லைனில் கற்கலாம். தமிழ் உட்பட 12 பிராந்திய மொழியில் டிஜிட்டல் கல்வியை கற்க முடியும்.
இந்த ஆண்டு சுற்றுச்சூழல், மேம்பாடு, மனித உரிமைகள், துாய்மை இந்தியா பிரசாரம் ஆகிய தலைப்புகளில் இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 14-வது சர்வதேச ஆவணப்படத் திருவிழா காமராசர் பல்கலைக்கழகத்தில் நடக்கிறது. பிஹார் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர் இவ்விழாவை இன்று தொடங்கி வைக்கிறார்.
பல்கலைக்கழகத் துணை வேந்தர் குமார் தலைமை வகிக் கிறார். மார்ச் 3-ம் தேதி நடக்கும் நிறைவு விழாவில் தமிழக செய்தித் துறை அமைச்சர் சாமி நாதன் பங்கேற்கிறார். விழாவில், பல்வேறு விருதுகள் பெற்ற சிறந்த 20 படங்கள் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்படுகின்றன. சர்வதேச பார்வையாளர்களும் பங்கேற்கின்றனர்.
நடுவர்கள் மூலம் சிறந்த படங்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். துணை வேந்தர் குமார், பதிவாளர் சதா சிவம், இஎம்ஆர்சி இயக்குநர் முரளி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
8 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago
கல்வி
10 days ago
கல்வி
10 days ago
கல்வி
11 days ago
கல்வி
11 days ago
கல்வி
12 days ago
கல்வி
12 days ago