வளரும் தொழில்நுட்பங்களில் புதிய படிப்பு: அன்சிஸ் நிறுவனத்துடன் சென்னை ஐஐடி ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

சென்னை: வளரும் தொழில்நுட்பங்களில் புதிய படிப்புகளை தொடங்குவதற்காக அன்சிஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில்கொண்டு மாணவர்களின் கற்பித்தல் பணிகளுக்காக பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட சென்னை ஐஐடிதொடர்ந்து ஆர்வம் காட்டிவருகிறது.

அந்த வகையில், பொறியியல் மென்பொருள் துறையில் முன்னணியில் இருக்கும் ‘அன்சிஸ்’ நிறுவனத்துடன் இணைந்து, வளரும் தொழில்நுட்ப பகுதிகளில் புதிய படிப்புகளை தொடங்கவும், தொழில்சார் திறன்களை உருவாக்கவும் ஐஐடி திட்டமிட்டுள்ளது.

பெங்களூரு ஐஐடி மற்றும் ஐஐஎஸ்சி ஆகியவற்றின் தொழில்நுட்ப மேம்படுத்தப்பட்ட கற்றல் தளம் (என்பிடிஇஎல்) மூலமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மின்மயமாக்கல், 5ஜி தொழில்நுட்பம், தானியங்கி வாகனங்கள், ட்ரோன்கள் உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். இதற்கு பல்வேறு உதவிகளை வழங்கி ஆதரவளிக்க அன்சிஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.

சான்றிதழ் கட்டணம் தள்ளுபடி: இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், சென்னை ஐஐடியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கையெழுத்திடப்பட்டது. மேலும்,அன்சிஸ் நிறுவனத்தின் சிஎஸ்ஆர்நிதியுதவியின்கீழ் பின்தங்கியமாணவர்களின் சான்றிதழ் கட்டணமும் தள்ளுபடி செய்யப்பட உள்ளது. இதுதவிர தகுதியான மாணவர்களுக்கு சான்றிதழ் செலவீனத்தில் 50 சதவீதம் குறைக்கப்படும் என சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

கல்வி

10 days ago

கல்வி

10 days ago

கல்வி

11 days ago

கல்வி

11 days ago

கல்வி

12 days ago

கல்வி

12 days ago

மேலும்