திருச்சி: திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்ஐடி), முதுநிலை வணிக நிர்வாகம்(எம்பிஏ) படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருச்சி என்ஐடி வெளியிட்ட அறிக்கை: திருச்சி என்ஐடி-யில் எம்பிஏ வகுப்புகள் ஜூலை மாதம் தொடங்கவுள்ளன. இரண்டு ஆண்டுகள் முழு நேர வகுப்புகள் கொண்ட இந்தப் படிப்பில் சேர, ஏதேனும்ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இளங்கலை இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்போரும் விண்ணப்பிக்கலாம்.
2022-ம் ஆண்டு நடைபெற்ற பொது சேர்க்கை தேர்வில்(சிஏடி) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில், தேர்வு மதிப்பெண், நேர்காணல், கல்வி செயல்திறன் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு மத்திய அரசின் ஒதுக்கீட்டின்படி மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எம்பிஏ படிப்பில் சேரவிரும்பும் மாணவர்கள், www.nitt.edu என்ற இணையதளத்தில் பிப்.28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
முக்கிய செய்திகள்
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago