பிளஸ் 1 அகமதிப்பீடு மதிப்பெண்ணை மார்ச் 1-க்குள் பதிவேற்ற உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: பிளஸ் 1 மாணவர்களுக்கான அகமதிப்பீடு மதிப்பெண் விவரங்களை மார்ச் 1-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்களுக்கும் தேர்வுத் துறை இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுவரும் மார்ச் மாதம் தொடங்கி நடைபெற உள்ளது. செய்முறை தேர்வுகள் மார்ச் முதல் வாரத்தில் நடத்தப்பட உள்ளன.

இந்நிலையில், பிளஸ் 1 மாணவர்களுக்கு அகமதிப்பீடு மதிப்பெண் வழங்குவதற்கான வழிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளி தலைமை ஆசிரியர்கள் அகமதிப்பீடு மதிப்பெண்ணை பதிவு செய்வதற்கான வெற்று பட்டியலை https://dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பின்னர், செய்முறை தேர்வு, வருகைப் பதிவு, இணை செயல்பாடுகள் தொடர்பான அகமதிப்பீடு மதிப்பெண்ணை மார்ச் 1-ம் தேதிக்குள் மேற்கண்ட இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பிறகு, அகமதிப்பீடு மதிப்பெண் பட்டியல்களை அந்தந்த மாவட்ட தேர்வுத் துறை அலுவலகங்களில் மார்ச் 2-ம் தேதிக்குள் தலைமை ஆசிரியர்கள் ஒப்படைக்க வேண்டும். அவற்றை மாவட்ட தேர்வுத் துறை உதவி இயக்குநர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.இதுகுறித்து தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

8 days ago

மேலும்