சென்னை: இளநிலை பட்டப் படிப்புகளுக்கான பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்வியை இணைப்பது குறித்த வரைவு அறிக்கையை யுஜிசி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து யுஜிசி செயலர் ரஜினிஷ் ஜெயின் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இளநிலை பட்டப் படிப்புக்கான பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்வியை சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020 வலியுறுத்துகிறது. அதன் அடிப்படையில் சுற்றுச்சூழல் கல்வியை, இளநிலை பாடப்பிரிவுகளுக்கான பாடத்திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் சுற்றுச்சூழல் மற்றும் அதன் பாதுகாப்பு குறித்த அவசியத்தை ஏற்படுத்த முடியும். இந்த திட்டத்துக்கான வரைவு அறிக்கை மற்றும் பாடத்திட்டம், யுஜிசி சார்பில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கை மற்றும் புதிய பாடத்திட்ட கட்டமைப்பு குறித்து பொதுமக்கள், கல்வியாளர்கள் தங்கள் கருத்துகளை https://uamp.ugc.ac.in என்ற இணையதளம் வாயிலாக பிப்.22-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை யுஜிசி வலைதளத்தில் (https://www.ugc.ac.in/) அறிந்து கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
கல்வி
24 mins ago
கல்வி
15 hours ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago