தமிழக அரசுப் பள்ளிகளில் ‘மல்லி’ திரைப்படம் அடுத்த வாரம் திரையிடப்படுகிறது

By செய்திப்பிரிவு

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக ‘மல்லி’ என்ற திரைப்படம் வரும் 13 முதல் 17-ம் தேதி வரை திரையிடப்பட உள்ளது.

இது தொடர்பாக, பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில், அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சிறுவர் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. அந்தவகையில், வரும் 13 முதல் 17-ம் தேதி வரை ‘மல்லி’ என்ற தமிழ்த் திரைப்படம் திரையிடப்படும்.

1999-ல் தேசிய திரைப்பட விருதுகளில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக சிறந்த படமாக தேர்வுசெய்யப்பட்ட மல்லி திரைப்படத்தை ஒளிபரப்புவதற்கான இணைப்பு லிங்க், பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக, வேறு படத்தை திரையிடக் கூடாது.

இதற்கான பொறுப்பு ஆசிரியர்படத்தை திரையிடும் முன் பார்த்துவிட்டு, கதைச் சுருக்கத்தைப் படித்து, படத்தின் பின்னணி குறித்து மாணவர்களுக்கு விளக்கவேண்டும். இது தொடர்பான வழிமுறைகளைப் பின்பற்றி, தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இந்தப் படத்தை திரையிட்டுக் காண்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

13 hours ago

கல்வி

16 hours ago

கல்வி

17 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

8 days ago

மேலும்