ஜேஇஇ மெயின் தேர்வில் ஆலன் கரீர் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த 7 மாணவர்கள் 100% பெற்று தேர்ச்சி

By செய்திப்பிரிவு

சென்னை: ஜேஇஇ மெயின் தேர்வுகள் கடந்த ஜனவரி 24 முதல் பிப்.1-ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை நாடு முழுவதிலுமுள்ள 8.24 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.

இதுகுறித்து ஆலன் தலைவர் பிரஜேஷ் மகேஸ்வரி கூறும்போது, ``ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளின்படி ஆலன் கரீர் இன்ஸ்டிடியூட்டில் பயின்ற கவுஷல் விஜய்வர்கியா, தேஷாங்க் பிரதாப் சிங், ஹர்ஷுல் சஞ்சய் பாய், சோஹம் தாஸ், திவ்யான்ஷ் ஹேமந்த்ரா ஷிண்டே, கிரிஷ் குப்தா, அபினித் மஜேதே ஆகியோர் 100 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர்'' என்றார்.

ஆலனில் பயின்று 100-க்கு 100 மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கவுஷல் விஜய்வர்கியா கூறும்போது, ``எனது அண்ணன் ஐஐடியில் படித்து வருகிறார். அவர்தான் ஆலனை பரிந்துரை செய்தார். ஆலனில் படிப்பதற்கான சூழல் நன்றாக உள்ளது. இங்குள்ள ஆசிரியர்கள் தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தனர். சொல்லிக்கொடுக்கும் விதமும் நன்கு புரிந்துகொள்ளும் வகையில் சிறப்பாக இருந்தது. நான் தினமும் 10-12 மணி நேரம் படித்தேன்" என்றார்.

இதுபோல `படிக்கும்போது அவ்வப்போது ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்துக்கொள்வேன்' என்று கிரிஷ் குப்தாவும், `ஒவ்வொரு நாளும் எதையெல்லாம் படிக்க வேண்டும் எனத் திட்டமிட்டு அதன்படி படித்தேன்' என்று தேஷாங்க் பிரதாப் சிங்கும், `3 பாடப் பிரிவுகளுக்கும் சரிசமமான முக்கியத்துவம், நேரம் ஒதுக்கிப் படித்தேன்' என்று ஹர்ஷுல் சஞ்சய் பாயும், `எனக்கு நானே முடிந்த அளவுக்குத் தேர்வுகளை வைத்து எழுதிப் பார்த்தேன்' என்று சோஹம் தாஸும் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE