திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களிடம் கட்டணம் வசூல்: பெற்றோர் அதிருப்தி

By செய்திப்பிரிவு

திருப்பூர்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத மாநகராட்சி பள்ளியில் ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக, பெற்றோர் மற்றும் மாணவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாநகரில் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி கேவிஆர் நகர். இங்குள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளி ஒரே வளாகத்துக்குள் செயல்படுகின்றன. 2016-ம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாக இருந்த நிலையில், 2017-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

தற்போது தொடக்கப் பள்ளியில் 450 மாணவ, மாணவிகள், 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள உயர்நிலைப் பள்ளியில் 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் என, ஒரே வளாகத்தில் 900-க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். நடப்பாண்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுகின்றனர்.

இவர்களுக்கு, முன்பு தேர்வு மையமாக நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அருகே உள்ள கருவம்பாளையம் உயர்நிலைப் பள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுத்தேர்வுக்கு கட்டணமாக மாணவர்களிடம் ரூ.150 வசூலித்துள்ளதாக, பள்ளி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, "அரசுப் பள்ளி, மாணவர்களின் தேவைக்கு அதிகமான விஷயங்களை செய்து தருகிறது. ஆனால், சிலரின் சுயநல நோக்கத்தால் அரசுப் பள்ளி மீதான பிம்பம் தவறாக சமூகத்தில் சித்தரிக்கப்படுகிறது. தற்போது, கேவிஆர் நகர் உயர்நிலைப் பள்ளியில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் ரூ.150 கட்டணம் வசூலித்துள்ளனர்.

எதற்கு கட்டணம் என்று தெரியாமல், தொழிலாளர்களின் அறியாமையை பள்ளி நிர்வாகம் தங்களுக்கு சாதகமாக்கி கொள்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. இதேபோல, ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களிடம், அரசின் எந்தவித வழிகாட்டுதல்கள், உத்தரவு இல்லாமல் ரூ.200 வசூலிக்கப்பட்டது. இது தவறான முன்னுதாரணம்" என்றனர்.

முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி கூறும்போது, "கேவிஆர் நகர் உயர்நிலைப் பள்ளியில் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்படும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

3 hours ago

கல்வி

8 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

7 days ago

மேலும்