பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடக்கும் நாள் மாற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: பள்ளி மேலாண்மை குழு கூட்டம், இனி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இயங்கிவரும் பள்ளி மேலாண்மை குழுக்கள் (எஸ்எம்சி) மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. அதன்படி, பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சிப் பிரதிநிதி, கல்வியாளர்களை உள்ளடக்கிய 20 உறுப்பினர்கள்கொண்ட குழுவாக எஸ்எம்சி மாற்றி அமைக்கப்பட்டது. அத்துடன், பள்ளிகளில் மாதந்தோறும் இறுதி வெள்ளிக்கிழமையில் எஸ்எம்சி கூட்டம் நடத்தப்பட்டு, பள்ளி வளர்ச்சிக்கான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில் அனைத்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலில் ‘பள்ளி மேலாண்மை குழு கூட்டம், இனிவரும் காலங்களில் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை நடைபெறும். அந்த அடிப்படையில் வரும் மாதத்தில் இக்கூட்டம்,பிப்.3-ம் தேதி நடைபெறும். இதே நடை முறைதான் இனி மாதந்தோறும் தொடரும். அதற்கேற்ப ஏற்பாடுகளை செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE