தேசிய வாக்காளர் தினத்தில் அரசு பள்ளி மாணவியின் விழிப்புணர்வு பாடல் வெளியீடு

By செய்திப்பிரிவு

மதுரை: மதுரை மேலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நேற்று வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, உதவித் தலைமை ஆசிரியர் சண்முகவேல் தலைமையில் நடைபெற்றது.

வார்டு கவுன்சிலர் ஆயிஷாபேகம் முன்னிலையில் மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனையொட்டி, பிளஸ் 2 மாணவி சுபலெட்சுமி, வாக்களிப்பதன் அவசியம் குறித்து எழுதிய ‘ஓட்டுப் போட வா, உரிமை காக்க வா, வறுமை ஒழிக்க வா, வாக்களிக்க வா’ என்ற பாடல் குறுந்தகடு வெளியிடப்பட்டது.

உதவித் தலைமை ஆசிரியர் முன்னிலையில் மாணவி சுபலட்சுமி வெளியிட தமிழாசிரியை ஆர்த்தி பெற்றுக் கொண்டார். கணினி ஆசிரியர் பரமசிவம் நன்றி கூறினார். மாணவி சுபலட்சுமி, சென்னை புத்தகத் திருவிழாவில் நடந்த கவிதைப் போட்டியில் பங்கேற்று சிறந்த கவிதையாக தேர்வாகி நற்கவிஞர் பட்டய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

23 hours ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

8 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

கல்வி

10 days ago

கல்வி

11 days ago

கல்வி

11 days ago

கல்வி

11 days ago

கல்வி

11 days ago

மேலும்