காஞ்சியில் மாநில அளவிலான கலை திருவிழா: பள்ளி மாணவர்கள் 3,000 பேர் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடைபெறும் மாநில அளவிலான கலைத் திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் 3,000 பேர் பங்கேற்றனர்.

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. இதில் 34 வகையிலான தனி நபர் போட்டிகளும், 4 வகையிலான குழு போட்டிகளும் இடம் பெற்றன. பரதம், கரகாட்டம், கோலாட்டம், தவில் இசை, புல்லாங்குழல் உட்பட பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றன.

மாவட்ட அளவில் முதலிடம் பெற்று தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இடையேயான போட்டிகள் தற்போது நடைபெற்று முடிந்துள்ளன. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார்சத்திரம், குன்றத்தூர் ஆகிய இரு இடங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன.

தனிநபர் போட்டிகள் 34-ல் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒருவர் வீதம் தலா 38 பேர் பங்கேற்றனர். குழுப் போட்டிகளில் ஒவ்வொரு குழுவில் இருந்தும் 10 பேர் என 2,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மொத்தமாக 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் இந்தப் போட்டிகளில் பங்கேற்றனர்.

மாநில அளவிலான போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு வரும் ஜன. 12-ம் தேதி நடைபெறும் பரிசளிப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பரிசுகளை வழங்க உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 hour ago

கல்வி

5 hours ago

கல்வி

6 hours ago

கல்வி

22 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

8 days ago

கல்வி

8 days ago

கல்வி

8 days ago

மேலும்