ஐஎப்எஸ் நேர்காணலுக்கு மாதிரி தேர்வு ஏற்பாடு: தமிழக அரசு பயிற்சி மையம் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: ஐஎப்எஸ் முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு நேர்காணலுக்கு மாதிரி தேர்வு நடத்த தமிழக அரசு பயிற்சி மையம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் பயிற்சித் துறையின் தலைவர் வெ.இறையன்பு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையம் சென்னையில் இயங்கி வருகிறது. இங்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அகில இந்திய குடிமைப் பணிகளில் அடங்கிய முதல்நிலை, முதன்மைத் தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள, சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள, ஏழை, எளிய ஆர்வலர்களுக்கு பயனளிக்கும் வகையில் இப்பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இப்பயிற்சி மையத்தில், இந்திய வனப்பணி (ஐஎப்எஸ்) முதன்மைத்தேர்வுக்கு 9 ஆர்வலர்கள் தங்கிபயின்றனர். அவர்களில் 5 பேர்தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 3 பேர் மகளிர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஎப்எஸ் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த ஆர்வலர்களுக்கு இப்பயிற்சி மையத்தின் மூலம் மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இத்தேர்வை பணியில் உள்ள,ஓய்வு பெற்ற அகில இந்தியகுடிமைப் பணி அலுவலர்கள், தலை சிறந்த வல்லுநர்கள் நடத்துவர். இது, தேர்ச்சி பெற்றுள்ள ஆர்வலர்கள், ஆளுமைத் தேர்வை மிகச் சிறப்பான முறையில் எதிர்கொள்ள பெரிதும் உதவும்.

அரசு பயிற்சி மையத்தின் மூலம் தேர்ச்சி பெற்றுள்ள ஆர்வலர்கள் தவிர, வனப்பணி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த பிற ஆர்வலர்களும், இப்பயிற்சி மையத்தில் ஜனவரி 2,3-ம் தேதிகளில்நடைபெறும் மாதிரி ஆளுமைத்தேர்வில் பங்கேற்கலாம். அவ்வாறு பங்கு பெற விரும்பும் ஆர்வலர்கள், தங்கள் விருப்பத்தை, (DAF-I மற்றும் DAF-II) aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு டிசம்பர் 30-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்களை www.civilserviceindia.com என்ற இணைய தளத்தில் காணலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

2 hours ago

கல்வி

2 hours ago

கல்வி

2 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

மேலும்