சென்னை: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகையைப் பதிவு செய்ய ஜனவரி 1-ம் தேதி முதல் புதிய செயலியை பள்ளிக்கல்வித் துறை செயல்படுத்துகிறது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கும் பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும்மாணவர்கள் வருகைப் பதிவு ‘டிஎன்எஸ்இடி ஸ்கூல்ஸ்’ என்ற செல்போன் செயலியில் தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாக கூறப்பட்டது.
இதையடுத்து எளிய முறையில் வருகைப்பதிவை மேற்கொள்ள ஏதுவாக ‘டிஎன்எஸ்இடி அட்டன்டென்ஸ்’ எனும் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலிஜன.1-ம் தேதி முதல் அனைத்துமாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம்வருகைப்பதிவு மேற்கொள்ள வேண்டும். இணையசேவை இல்லாத நேரங்களில் வருகைப்பதிவு விவரங்களை செயலியில் பதிவேற்றம் செய்யலாம். இணையசேவை கிடைத்ததும் அந்த விவரங்கள் தானாகவே சர்வரில் சேமிக்கப்பட்டுவிடும்.
எனவே, வழிமுறைகளைப் பின்பற்றி புதிய செயலி வழியாக வருகைப் பதிவு மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.
» ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வில் 86% பேர் தோல்வி: 21,543 பேர் மட்டுமே தேர்ச்சி
» டிச.23-ல் குரூப்-2 முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி காணொலி வெளியீடு: தமிழக அரசு தகவல்
முக்கிய செய்திகள்
கல்வி
21 mins ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago