தூத்துக்குடியில் தனியார் பங்களிப்புடன் சைனிக் பள்ளி: மத்திய அரசு தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் பள்ளிகள், மாநில அரசு பள்ளிகளுடன் இணைந்து 100 புதிய சைனிக் பள்ளிகளை அமைப்பதற்கான முயற்சிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் தகவலை பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பட் வெள்ளிக்கிழமை மக்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியது: தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் , தனியார் பள்ளிகள் , மாநில அரசு பள்ளிகளுடன் இணைந்து 100 புதிய சைனிக் பள்ளிகளில் 18 புதிய சைனிக் பள்ளிகளைத் தொடங்க சைனிக் பள்ளிகள் சங்கம் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளது. தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுத்துறை மற்றும் தனியார் துறை பங்களிப்பின் கீழ் சைனிக் பள்ளி தொடங்கப்படுகிறது.

கூட்டு முறையில் புதிய சைனிக் பள்ளிகளைத் திறப்பதற்கான தகுதிகளைப் பொறுத்தவரை, சைனிக் சங்கத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டதன் அடிப்படையில் குறிப்பிட்ட தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்தல், அங்கீகரிக்கப்பட்ட துணைச் சட்டங்களுக்கு இணங்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE