சென்னை: அரசுப் பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில் அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின்கீழ் 37,481 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 52.7 லட்சம் மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். இதற்கிடையே அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை ஊக்குவிக்க பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் மாணவர்களை ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நிலைகளில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க செய்து உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் அரசின் முன்னுரிமைகளை பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதுவாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் மூலம் மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும், அந்தந்த மாவட்டக் கல்விஅலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்த விளையாட்டுப் பொருட்களை அரசுப் பள்ளிகளுக்கு விநியோகம் செய்வதற்கான பணிகளை முடுக்கிவிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
கல்வி
22 hours ago
கல்வி
23 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago