கல்வெட்டியல் பட்டயப் படிப்பு - டிச.31-க்குள் விண்ணப்பிக்கலாம்

By செய்திப்பிரிவு

சென்னை: ஓராண்டு கல்வெட்டியல் பட்டயப் படிப்புக்கு டிச.31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2023-2024-ம் ஆண்டுக்கான ஓராண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், அகழாய்வுக்கான பட்டய வகுப்பு, வரும் ஜனவரி மாதம் தொடங்கப்பட உள்ளது. இவ்வகுப்பில் கல்வெட்டியல், தொல்லியல் வழி தமிழக வரலாறு, மொழி, பண்பாடு, கலை, இலக்கியம் குறித்து அறிந்து கொள்வதற்கும், கல்வெட்டுப் படியெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்தலுக்கான பயிற்சியும் அளிக்கப்படும்.

குறைந்தபட்ச கல்வித் தகுதி: இவ்வகுப்புக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்புத் தேர்ச்சி. வயது வரம்பு கிடையாது. இதில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பட்டய வகுப்பு வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தோறும் (முழு நாள்) நேரடியாக ஓராண்டு காலம் நடைபெறும். இப்பட்டய வகுப்புக்கான விண்ணப்பத்தை, www.ulakaththamizh.in என்னும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சேர்க்கைக் கட்டணம் ரூ.3 ஆயிரம். இந்த கட்டணத்தை “இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்” எனும் பெயரில் வங்கி வரைவோலையாகவோ அல்லது நிறுவன வங்கிக் கணக்கில் இணைய வழியிலோ செலுத்தி, கட்டணம் செலுத்தப்பட்டதற்கான ரசீதை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் டிச.31-க்குள், இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை 600 113 என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலைநாட்களில் 044 2254 2992, 95000 12272ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

2 hours ago

கல்வி

7 hours ago

கல்வி

1 day ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

கல்வி

10 days ago

கல்வி

10 days ago

மேலும்