சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 446 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டன. இதில் மொத்தம் 93,571 இடங்கள் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் 85,023 இடங்களில் மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
இதையடுத்து எஞ்சிய இடங்களை நிரப்புவதற்கான துணைக்கலந்தாய்வு நவ. 20 முதல் 22-ம் தேதி வரை இணையவழியில் நடைபெற்றது. இதில் 7,079 பேருக்கு கல்லூரிகள் ஒதுக்கப்பட்டு சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் நடப்பாண்டு பொறியியல் படிப்புகளில் சுமார் 62,000 இடங்கள் காலியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர எஸ்சிஏ பிரிவில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு இன்றும், நாளையும் (நவ. 24, 25) நடைபெற உள்ளது. இதில் பொது மற்றும் துணைக் கலந்தாய்வில் ஒதுக்கீடு ஆணை பெற்ற எஸ்சி பிரிவு மாணவர்கள் ww.tneaonline.org என்ற வலைதளம் வழியாக கல்லூரிகளை இன்று மாலை 7 மணிக்குள் தேர்வுசெய்ய வேண்டும். அவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு நாளை காலை 10 மணிக்கு வழங்கப்படும். அதனை மாணவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் உறுதிசெய்ய வேண்டும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
கல்வி
18 hours ago
கல்வி
16 hours ago
கல்வி
19 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago