சென்னை: சமூக ஊடகங்கள் தொடர்பானஇணையவழி சான்றிதழ் பயிற்சியை பெற விரும்பும் கல்வியாளர்கள் விண்ணப்பிக்கலாம் என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஏஐசிடிஇ திட்டப் பிரிவு ஆலோசகர் ரமேஷ் உன்னி கிருஷ்ணன், அனைத்து தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்டோருக்கு அனுப்பிய சுற்றறிக்கை: மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உதவியோடு சமூக ஊடகங்கள் தொடர்பான சான்றிதழ் பயிற்சி,கல்வியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. சமூக ஊடகங்கள் வாயிலாக கற்பிப்பதற்கான உத்திகள், தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடுகள் மூலம் குறைந்த செலவில் தங்கள் கருத்துகளை கல்வியாளர்கள் முன்வைப்பது தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படும்.
90 மணி நேர பயிற்சி: இது இணைய வழியில் வழங்கப்படும் 90 மணி நேர பயிற்சியாகும். இதற்கு கல்விக் கட்டணம்ரூ.88.50, மதிப்பீட்டுக் கட்டணம் ரூ.600 வசூலிக்கப்படும். இதில் பங்கேற்க https://socialmobileskills.in/pretraining/ என்ற இணையதளத்தை அணுகலாம். திறம்பட பயிற்சியை முடிப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/drive/folders/1X5OkIz3w5w6xsUSo_txvTMMfeAiZiPEM என்ற இணையதளத்தை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.
முக்கிய செய்திகள்
கல்வி
3 hours ago
கல்வி
19 hours ago
கல்வி
21 hours ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago