துணை மருத்துவப் படிப்பில் 5,000-க்கும் மேல் காலியிடங்கள்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் துணை மருத்துவப் பட்டப்படிப்பு, மருந்தாளுநர்கள், டிப்ளமோ நர்சிங், டிப்ளமோ ஆப்டோமெட்ரி, பாராமெடிக்கல் டிப்ளமோ சான்றிதழ் படிப்புகளுக்கு 21 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,526 இடங்கள் உள்ளன. அதேபோல்,தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 15,307 இடங்கள் உள்ளன.

இந்த இடங்களுக்கு 2022-23-ம்கல்வியாண்டுக்கு 87,764 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். இதில், துணை மருத்துவ படிப்புகளுக்கு மட்டும் 58,980 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், 58,141 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தற்போது 5,251 இடங்கள் காலியாக இருப்பதாக மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இவற்றுக்கான 2-ம்கட்ட கலந்தாய்வு விரைவில் நடைபெறும். கூடுதல் தகவல்களை https://tnmedicalselection.net, https://www.tnhealth.tn.gov.in இணையதளங்களில் பார்க்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

4 hours ago

கல்வி

9 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

8 days ago

மேலும்