விநாடி வினா போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு: என்எல்சி இந்தியா நிறுவனம், ‘இந்து தமிழ் திசை' இணைந்து நடத்தின

By செய்திப்பிரிவு

சென்னை: என்எல்சி இந்தியா நிறுவனம் மற்றும் ‘இந்து தமிழ் திசை' நாளிதழ் இணைந்து சென்னையில் நடத்திய விநாடி வினா போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன. நாடு முழுவதும் 'கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்' அக்.31 முதல் நவ.6-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, என்எல்சி இந்தியா நிறுவனம் மற்றும் 'இந்து தமிழ் திசை' நாளிதழ் இணைந்து 'ஊழலற்ற இந்தியாவே வளர்ந்த தேசம்' என்ற கருப்பொருளில் பள்ளி மாணவர்களுக்கான விநாடி வினா போட்டிகளை நடத்தி வருகிறது.

ஏற்கெனவே திருச்சி, மதுரை, கோவை ஆகிய மாநகரங்களில் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக சென்னை அடையாறு காந்திநகரில், கோட்டூர்புரம் ரயில் நிலையம் பின்புறம் உள்ள பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்றது. ஜூனியர் பிரிவு போட்டியில் 5 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும், சீனியர் பிரிவில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும் பங்கேற்றனர். ஜூனியர் பிரிவில் ஸ்ரீஆர்எம்கேபி நூற்றாண்டு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஏ.ஹேமலட்சுமி முதலிடம் பெற்றார். அடுத்தடுத்த இடங்களை இ.மைசா (ஸ்ரீஜெயம் நாமக்கல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி), ஏ.யோகாலட்சுமி (ஆர்எம்கேபி நூற்றாண்டு மகளிர்மேல்நிலைப் பள்ளி), எம்.ஹேமவர்ஷினி (ஆர்எம்கேபி நூற்றாண்டு மகளிர் மேல்நிலைப் பள்ளி), எம்.எஸ்.யாஷிகா (ஸ்ரீஆர்எம்கேபி நூற்றாண்டு மகளிர் மேல்நிலைப் பள்ளி), ஆர்.கவி (எஸ்ஜேஎன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி) ஆகியோர் பிடித்தனர்.

என்எல்சி இந்தியா நிறுவனம் மற்றும் ‘இந்து தமிழ் திசை' நாளிதழ் இணைந்து சென்னையில் நடத்திய
விநாடி வினா போட்டியில் சீனியர் பிரிவில் வென்ற மாணவர்களுடன் லெப்டினென்ட் கர்னல்
(என்சிசி, சென்னை) சாமுவேல் பிரேம்குமார், பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
செயலர் ஏ.ஸ்டெனிஸ்லெஸ் உள்ளிட்டோர்.

சீனியர் பிரிவில் சென்னை பத்மசேஷாத்ரி பாலபவன் பள்ளியைச் சேர்ந்த பி.ஹரிமாதவன், ஷிவ் நிர்மல் ஆகியோர் முதலிடம் பெற்றனர். அதற்கடுத்த இடங்களை இ.முகேஷ், இ.ஜெயவர்ஷினி (அரசு மேல்நிலைப் பள்ளி, பளூர்), பி.மணிகண்டன், எஸ்.கரண் (வள்ளல் எஸ். ஐ. அழகர்சாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளி), என்.ஹரிகிருஷ்ணன், எம்.தினகர்(அட்டாமிக் எனர்ஜி சென்ட்ரல் ஸ்கூல், கல்பாக்கம்), ஸ்ரேயான்ஸ் ஜெயின், பி.ஹரிணி (தி ஹிந்து சீனியர் செகண்டரி ஸ்கூல்), கே.அப்துல் அஜிஸ், எல்.மைக்கேல் ராஜ் (பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி, புதுச்சேரி) ஆகியோர் பிடித்தனர். சீனியர் பிரிவில் மாநில அளவிலான இறுதிப் போட்டிகள் நெய்வேலியில் நாளை (நவ.4) நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

14 hours ago

கல்வி

15 hours ago

கல்வி

17 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

மேலும்