ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.10 கோடியில் மாநகராட்சி பள்ளிகளுக்கு நவீன மேசைகள்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.10 கோடி செலவில் மாநகராட்சி பள்ளிகளுக்கு 8,038 நவீன மேசைகள் வழங்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளுக்கு இணையாக சென்னை மாநகராட்சி பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். அண்மையில் அரசு முறை பயணமாக டெல்லி சென்ற ஸ்டாலின், அந்த மாநில அரசு நடத்தும் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டார். அப்பள்ளிகளில் உள்ளதை போன்று சென்னை மாநகராட்சி பள்ளிகளிலும் நவீன மேசைகளை அமைக்க உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.10 கோடி செலவில் சென்னையில் உள்ள 122 பள்ளிகளில் 10 ஆயிரத்து 279 மேசைகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்துக்கு (டான்சி) பணி ஆணை வழங்கப்பட்டது. இதுவரை 122 பள்ளிகளில், இரு மாணவர்கள் அமரும் வகையிலான 8,038 மேசைகள் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

16 hours ago

கல்வி

23 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

மேலும்