சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் பொதுப் பிரிவினருக்கு ஆன்லைனில் நடந்துவந்த முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்தது. 5,647 எம்பிபிஎஸ் இடங்கள், 1,389 பிடிஎஸ் இடங்கள் நிரம்பியுள்ளன.
தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு பொதுப் பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆன்லைனில் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினமே மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு பிரிவினருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நேரடியாக சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடந்தது.
இதில், 65 இடங்கள் நிரம்பின. மறுநாள் 20-ம் தேதிநடந்த அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு கலந்தாய்வில் 565 இடங்கள் நிரப்பப்பட்டன. இந்நிலையில், ஆன்லைனில்நடந்துவந்த பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று நிறைவடைந்தது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விவரம் https://tnmedicalselection.net என்ற தமிழக சுகாதாரத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலாளர் ஆர்.முத்துச்செல்வன் கூறியபோது, ‘‘அரசு, தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்குமுதல் சுற்று கலந்தாய்வு ஆன்லைனில் நடந்து முடிந்துள்ளது. இதில் 5,648 எம்பிபிஎஸ் இடங்களில் 5,647 இடங்களும், 1,432 பிடிஎஸ் இடங்களில் 1,389 இடங்களும் நிரம்பியுள்ளன.
ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் எஸ்.டி. பிரிவினருக்கான 1 எம்பிபிஎஸ் இடம், 3 தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டுக்கான எம்பிசிபிரிவில் 43 பிடிஎஸ் இடங்கள் நிரம்பவில்லை. இடஒதுக்கீடு பெற்றவர்கள் நவ.4-ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேரவேண்டும். 2-ம் சுற்றுகலந்தாய்வு நவ.7-ம் தேதி தொடங்கும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
கல்வி
15 hours ago
கல்வி
16 hours ago
கல்வி
18 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago