சென்னை: சென்னையை அடுத்த அம்பத்தூரில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் மேஷன் (Mason) எனும் ஓராண்டு கால கட்டிடம் கட்டுதல் தொடர்பான படிப்புக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இந்த படிப்பில் சேர மாணவர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. மேலும், பயிற்சி முடிப்பவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் கட்டுமானத் துறை சார்ந்த பணிகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இந்த படிப்பு அம்பத்தூர் ஐடிஐ-யில் மட்டுமே கற்றுத் தரப்படுகிறது. இதனால், அரசுப் பணிகளில் போட்டியின்றி வேலை கிடைக்கும். இந்த படிப்பில் சேரவிரும்புபவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வழியாகவோ அல்லது நேரடியாகவோ அக்.30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேஷன் படிப்பில் சேருபவர்களுக்கு இலவச மடிக்கணினி, சீருடை, மிதிவண்டி, வரைபட கருவிகள், பஸ் பாஸ், பாடப்புத்தகம் மற்றும் காலணியுடன் சேர்த்து மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.750 அரசால் வழங்கப்படும்.
» சென்னை டுவின்டெக் அகாடமியில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மென்திறன் மேம்பாடு பயிற்சி
» கிராமப்பகுதியில் மருத்துவ சேவை செய்வேன்: தரவரிசையில் முதலிடம் பெற்ற அரசு பள்ளி மாணவி விருப்பம்
கூடுதல் விவரங்களுக்கு அம்பத்தூர் தொழிற் பயிற்சி மைய அலுவலரை 98404 89498 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
கல்வி
4 hours ago
கல்வி
23 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago
கல்வி
8 days ago