சென்னை: சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை பெறுவதற்கு அக்.31-ம்தேதிக்குள் மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிலையங்களில் 10-ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholorship.gov.in என்ற இணையதளத்தில் அக்.31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இணையதளம் மூலம்... தகுதியான மாணவ, மாணவிகள் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்திட்டத்துக்கு அக்.31-ம் தேதி வரை மேற்கண்ட இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
கல்வி
4 hours ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
10 days ago
கல்வி
11 days ago