பள்ளி மாணவர்களுக்கான விநாடி வினா போட்டி - அக்.22-க்குள் பதிவு செய்ய வேண்டும்

By செய்திப்பிரிவு

சென்னை: ‘என்.எல்.சி. இந்தியா நிறுவனம்’, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து, ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் – 2022’ முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விநாடி வினா போட்டியை நடத்துகின்றன.

‘நேர்மையே வாழ்க்கையின் வழி’ என்பதை நோக்கமாகக் கொண்டு ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் – 2022’ அக்-31 முதல் நவ.6 வரை நாடெங்கும் கடைபிடிக்கப்படவிருக்கிறது. இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. இந்தியா நிறுவனம், கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி, ‘இந்து தமிழ் திசை’யோடு இணைந்து பள்ளி மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கில் பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு ‘ஊழலற்ற இந்தியாவே வளர்ந்த தேசம்’ எனும் கருப்பொருளில் இப் போட்டியை நடத்துகின்றன. 5 முதல் 8-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் ஜூனியர் பிரிவிலும், 9 முதல் 12-ம் வகுப்புமாணவ-மாணவிகள் சீனியர் பிரிவிலும் பங்கேற்கலாம்.

போட்டியில் பங்கேற்க https://www.htamil.org/00074 என்ற ஆன்லைன் லிங்க்கில் பதிவுசெய்ய வேண்டும். பதிவுக் கட்டணம் ஏதுமில்லை. போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இ-சான்றிதழ் வழங்கப்படும். பதிவுசெய்ய கடைசி நாள் அக்.22.

இந்தப் போட்டியின் நாலெட்ஜ் பார்ட்னராக எக்ஸ் க்யூஸ் ஐடி இணைந்துள்ளது. கூடுதல் விவரங்களை அறிய கோவை - 98942 20609, சென்னை - 88385 67089, திருச்சி - 90031 28286, மதுரை - 98409 61866 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

2 hours ago

கல்வி

20 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

8 days ago

மேலும்