எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு 

By செய்திப்பிரிவு

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2022-23 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த செப்.12-ம் தேதி தொடங்கியது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பித்து வருகின்றனர். ஆன்லைனில் விண்ணப்பிப்பது அக்.3-ம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைய இருந்த நிலையில் மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலாளர் ஆர்.முத்துச்செல்வன் கூறும்போது, “ஆன்லைனில் வரும் 6-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு இதுவரை 38,676 பேர் பதிவு செய்துள்ளனர். அதில், 33,738 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

8 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

கல்வி

10 days ago

கல்வி

10 days ago

கல்வி

10 days ago

மேலும்