மருத்துவ கல்லூரிகளில் ராகிங் புகார்களுக்கு பிரத்யேக மின்னஞ்சல்

By செய்திப்பிரிவு

சென்னை: மருத்துவக் கல்லூரிகளில் ராகிங்தொடர்பான புகார் அளிக்க பிரத்யேக மின்னஞ்சல் முகவரி தொடங்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் சார்பில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:

மருத்துவக் கல்லூரிகளில் ராகிங் நடவடிக்கைகளைத் தடுக்க டாக்டர் அருணா வானிகர் தலைமையில் சிறப்புக் குழு ஒன்று தேசிய மருத்துவ ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஆய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் அளித்த புகார்கள் மீது விரிவான விவாதம் மேற்கொள்ளப்பட்டது. தற்கொலைக்குத் தூண்டும் வகையிலான ராகிங் செயல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

ராகிங் தொடர்பான புகார்களை அளிக்க பிரத்யேக antiragging@nmc.org.in என்ற மின்னஞ்சல் முகவரி தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள், தங்களது கல்லூரி வளாகங்களில் விரிவாக கொண்டு சேர்க்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

46 mins ago

கல்வி

5 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

8 days ago

மேலும்