கால்நடை மருத்துவ படிப்பு விண்ணப்பம் - திருத்தம் செய்ய கால அவகாசம்

By செய்திப்பிரிவு

சென்னை: கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் திருத்தம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் 2022-23-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் செப். 12-ம் தேதி தொடங்கியது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

கடந்த 26-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கான அவகாசம் அக்டோபர் 3-ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்யவும், சான்றிதழ் நகல்களை பதிவேற்றம் செய்யவும் அக். 3-ம் தேதி இரவு 8 மணி முதல் 6-ம் தேதி காலை 8 மணி வரை அவகாசம் அளிக்கப்படுகிறது. வெளிநாடு வாழ் இந்தியர், அவர்களின் வாரிசுகள், வெளிநாடுவாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் வெளி நாட்டினருக்கான இடஒதுக்கீடு இடங்களுக்கு அக். 14-ம் மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப வழிமுறை விவரங்களை இணைய தளத்தில் அறிந்துகொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

7 hours ago

கல்வி

7 hours ago

கல்வி

9 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

மேலும்