மானாமதுரை அருகே சொந்த பணத்தில் அரசு பள்ளியை சீரமைத்த தலைமை ஆசிரியர்

By இ.ஜெகநாதன்

மானாமதுரை அருகே சொந்தப் பணத் தில் அரசுப் பள்ளியை தலைமை ஆசிரி யர் சீரமைத்தார்.

மானாமதுரை அருகே வெள்ளிக் குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் 150 மாணவர்கள் படிக்கின்றனர். பத்து ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இப்பள்ளியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 6 வகுப்பறைக் கட்டிடங்கள் உள்ளன. அவை பராமரிப்பின்றி சேத மடைந்த நிலையில் இருந்தன. இதனால் மாணவர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு வந்து சென்றனர்.

இந்நிலையில் கடந்த மார்ச்சில் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்ற அருண்மொழி, பள்ளியைச் சீரமைக்க முடிவு செய்தார். இதையடுத்து முதற்கட் டமாக தனது சொந்தப் பணம் ரூ.50 ஆயிரத்தில் பள்ளியைச் சீரமைத்தார். இதைப்பார்த்த சக ஆசிரியர்கள், கிராம மக்களும் தங்களால் முடிந்தபணத்தைக் கொடுத்தனர். மொத்தம் வசூலான ரூ.2 லட்சத்தில் பள்ளிக் கட்டிடங்கள் முழுமையாக சீரமைக்கப்பட்டன. மேலும் வண்ணம் பூசப்பட்டு பள்ளிச் சுவர்களில் பொன்மொழிகள் எழுதப்பட்டுள்ளன. தலைமை ஆசிரியரின் இச்செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இது குறித்து தலைமை ஆசிரியர் அருண்மொழி கூறியதாவது:

பள்ளி வளாகத்தைச் சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளோம். அவற்றுக்கு மாணவர்கள்பெயர் சூட்டி, அவர்கள் மூலம் பராமரித்து வருகிறோம். மாணவர்களின் தனித்திறமைகளைக் கண்டறிந்து, அதில் போட்டிகளை நடத்தி ஊக்குவித்து வரு கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

14 hours ago

கல்வி

17 hours ago

கல்வி

18 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

8 days ago

மேலும்