சியுஇடி தேர்வு முடிவுகள் செப்.15-ம் தேதிக்குள் வெளியீடு

By செய்திப்பிரிவு

இளநிலைப் படிப்புகளுக்கான சியுஇடி தேர்வு முடிவுகள் வரும் 15-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக யுஜிசி தலைவர் ஜெகதீஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

இளநிலைப் படிப்புகளுக்கான பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு முடிவுகளை வரும் 15-ம் தேதி அல்லது அதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாகவே என்டிஏ அறிவிக்கும். அவற்றை https://cuet.samarth.ac.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

எனவே, சியுஇடி தேர்வு மதிப்பெண்ணைக் கொண்டு மாணவர் சேர்க்கை நடத்த உள்ள உயர்கல்வி நிறுவனங்கள், அதற்குரிய முன்னேற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE