நீட் தேர்ச்சி விகிதத்தில் தமிழகம் 23-ல் இருந்து 28-வது இடத்துக்கு பின்னடைவு

By செய்திப்பிரிவு

சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில், தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்த இரண்டு ஆண்டுகளைவிட இந்த ஆண்டு குறைந்துள்ளது. இதனால், அகில இந்திய அளவில் 23-வது இடத்திலிருந்து 28-வது இடத்திற்கு பின்னடைந்துள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் 497 நகரங்களில் அமைக்கப்பட்ட 3,570 மையங்களில் கடந்த ஜூலை 17-ம் தேதி நடந்தது. இந்த தேர்வை 17.78 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதில், 9.03 லட்சம் பேர் மருத்துவப் படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த 2020-ம் ஆண்டு தேர்வெழுதியவர்களில் 57.44 சதவீதத்தினர் தேர்ச்சிப் பெற்றிருந்தனர். கடந்த 2021-ம் ஆண்டில், 1 லட்சத்து 8 ஆயிரம் பேர் தேர்வெழுதினர். இதில், 54.40 சதவீதம் பேர் தேர்ச்சிப் பெற்றனர். நடப்பாண்டில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் இன்னும் குறைந்துள்ளது. தேர்வெழுதிய 1 லட்சத்து 34 ஆயிரம் மாணவ மாணவிகளில் 51.30 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

இந்த தேர்ச்சி விகித குறைவின் காரணமாக அகில இந்திய அளவில் 23-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது 28-வது இடத்துக்கு பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

18 hours ago

கல்வி

21 hours ago

கல்வி

21 hours ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

மேலும்